412. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது சரியா?
சென்ற ஆண்டு,சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி தந்தது, இவ்வாண்டு, AIAFB (All India Animal Welfare Board) மற்றும் சில மிருக வதை எதிர்ப்பு அமைப்புகளும் உச்சநீதி மன்றம் சென்று, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை வாங்கி விட்டன. பண்டைய தமிழர் நாகரிகத்தில் "ஏறு தழுவுதல்" என்ற பெயரில் ஒருவர் அல்லது இருவர் காளையை அடக்குவது, இப்போது "ஜல்லிக்கட்டு" என்ற பெயரில் ஒரு கூட்டமே, மிரண்டு ஓடும் காளை மீது பாய்வது என்ற அளவில் இருக்கிறது. இதில் வீரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டத்திடமிருந்து எப்படியாவது தப்புவதற்கு காளைகள் அலைபாயும்போது, பலருக்கும் காயம் ஏற்படுகிறது தான் மிச்சம் !!!
ஆனால், இந்த திடீர் தடை சரியானது இல்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் கூற முடியும்:
1. நீதிமன்றத்தில் இரண்டு பக்க கருத்துகளையும் கேட்டறிந்து, இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை,
status quo-வை நீதிமன்றம் அனுமதித்திருக்க வேண்டும். அதாவது, சென்ற ஆண்டு போலவே, சில நிபந்தனைகளுடன் போட்டியை நடத்துவதற்கு ! போட்டிக்கு இரண்டு நாட்கள் முன் தடை விதித்தது, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
2. ஜல்லிக்கட்டில் வதைக்கப்படுவதைக் காட்டிலும், பல சூழல்களில் மிருகங்கள் பயங்கரமான கொடுமைக்கு உள்ளாவது, ராமலிங்க அடிகளார் வழி வந்த, இந்த மிருக வதை எதிர்ப்பு ஆர்வலர்கள் அறியாத ஒன்று என்பது நம்பக்கூடியதாக இல்லை !
திரைப்படங்களில் (மிகச்சமீப காலத்து!) சண்டைக் காட்சிகளில், கோழிகளும், புறாக்களும் சண்டையிடுபவர்கள் மீது வீசப்படுகின்றன. வில்லன் கூட்டத்து அடியாட்கள், அந்த பறவைகள் மேல் விழுவதால், பல நசுங்கி உயிரை விடுகின்றன. அது போலவே, சில காட்சிகளில், வேகமாக ஓடி வரும் குதிரைகளை ( அவற்றின் முன்னங்கால்கள் முன் திடீரென்று கயிற்றை உயர்த்துவதன் மூலம்) தடுக்கி விழ வைக்கும்போது, திரையில் பார்ப்பதற்கு த்ரில்லிங்காக இருக்கலாம் !!! ஆனால், அந்த குதிரைக்கு பயங்கரமாக அடி படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதன் கழுத்து எழும்பே சில சமயங்களில் முறிந்து விடும். அச்சமயம், அதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை :(
மிருகவதை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், ரேக்ளா பந்தயத்தை அனுமதிப்பதிலும் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. காளைகளை சாட்டையால் அடித்து விரட்டி அவைகளை அதிவேகமாக ஓட வைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தானே! அது போலவே, (சகமனிதர்கள் மேல் வெளிப்படுத்துவதைக் காட்டிலும்!) மிருகங்களின் மேல் பரிவு காட்டும், மிருகவதையை எண்ணி தார்மீகக் கோபம் கொள்ளும், செலக்டிவ் அம்னீஸியா உடைய இந்த அறிவுஜீவிகள், குதிரைப் பந்தயங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்! ஏனெனில், அவை பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட (ஆனால், சாதாரண மக்களும் பணத்தை இழக்கும்!) மேட்டுக்குடி 'வீர' விளையாட்டு என்பதால்!
அப்பந்தயங்களிலும், குதிரைகளை சவுக்கால் அடி அடியென்று அடித்துத் தானே ஓட்டுகிறார்கள். மேலும், ஓரிரண்டு ஆண்டுகள் பந்தயங்களில் பங்கு பெற்ற குதிரைகள், அவைகள் பந்தயங்களுக்கு லாயக்கில்லை என்ற நிலையில், சுட்டுக் கொல்லப்படுகின்றன என்றும் கேள்விப்பட்டதுண்டு :(
கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், ஏதோ ஒரு சர்க்கஸில் மிருகங்களை சரியாக கவனிக்கவில்லை என்று கூறிக் கொண்டு, குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் ரசிக்கும் மிருகங்களின் சாகச நிகழ்ச்சிகளையே சர்க்கஸிலிருந்து நீக்க வேண்டிய சூழலை உருவாக்கிய பெருமையும் இந்த 'ஆர்வக் கோளாறர்களையே'(!) சாரும்! பள்ளிப்பருவத்தில் தீவுத்திடலில் நடைபெற்ற ஜெமினி சர்க்கஸை எண்ணிப் பார்க்கிறேன், நாஸ்டால்ஜியா ...
வெள்ளெலிகள், முயல்கள், குரங்குகள், குதிரைகள் ஆகியவை மேல் நடத்தப்படும் (வலி மிக்க) அறிவியல் பரிசோதனைகள் கூட, மிருகவதை என்ற வரையறைக்குள் தான் வருகின்றன என்பதை இங்கே நினைவு கூர்வது அவசியமாகிறது. இறைச்சிக்காக, விலங்குகளைக் கொல்வதை, தனி மனிதனின் உணவு விருப்பம் சார்ந்த உரிமை என்ற அளவில் நோக்கும்போது அது தவறில்லை என்றாலும், அவைகளைக் கொல்வதில் நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் முறைகள் சற்றுக் கொடூரமானவையே!
வலியற்ற மரணம் என்பது, அளவில் சிறியதாக உள்ள கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஆனால், இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடுகள் மிகுந்த வலியை அனுபவித்த பின்னரே உயிரை விடுகின்றன என்பது தான் உண்மை! நான் வாசித்தறிந்த, அவற்றின் சாவின் கொடூரத்தை இங்கு விவரிக்க விரும்பவில்லை :(
பல கோழிகளின் கால்கள் ஒன்றாகக் கட்டப்பட்டு, தலைகீழாக அக்கோழிகள் சைக்கிள் கைப்பிடியில் தொங்க விடப்பட்டு, கசாப்புக் கடைக்கு எடுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சியை, பல சமயங்களில் நாம் பார்க்கிறோம். அது போலவே, மூச்சு விடக்கூட முடியாத வகையில், 10 மாடுகள் பயணிக்கக்கூடிய வண்டியில் 25 மாடுகள் ஏற்றப்பட்டு, பலமணி நேர (மரண வேதனை) தரும் கொடும்பயணத்தின் முடிவில், வெட்டப்படும் இடத்தை மாடுகள் அடைகின்றன! எப்படியும் சிறிது நேரத்தில் சாகப் போகிற ஜென்மங்களுக்கு சௌகரியம் எதற்கு என்ற எண்ணம் தானே இதற்குக் காரணம் ????
மேற்கூறியதை வைத்துப் பார்க்கும்போது, ஜல்லிக்கட்டு ஒன்றும் மிருகங்களுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதியாக எனக்குத் தோன்றவில்லை! மேலும், ஸ்பெயின் போன்ற நாடுகளில், போட்டியில் அடக்கப்பட்ட காளைகளை, மிகக் கூர்மையான கத்தியை அவற்றில் உடம்பில் பாய்ச்சியே, துளியும் இரக்கமற்ற வகையில் கொன்று விடுவதைப் பார்க்கும்போது, நம்மூர் ஜல்லிக்கட்டை கொடுமையான விளையாட்டாக எண்ணிப் பார்க்க முடியவில்லை!
என்ன, போட்டிகளில் பங்கு பெறும் காளைகளுக்கு சாராயம் கொடுத்து, அவற்றின் ஆசன துவாரத்தில் மிளகாய்ப் பொடி ஏற்றி கொடுமைப் படுத்தாமல், காளைகளை அடக்க முன் வருபவர்களுக்கும், பொது மக்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
தீபாவளியின் போது கூடத் தான், வெடிச் சத்தத்தால், மிருகங்களும் பறவைகளும் (குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும்) பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறைந்தபட்சம், சத்தம் ஏற்படுத்தும் எல்லா வகை (ஊசிப்பட்டாசு முதல் ஹைட்ரஜன் பாம் வரை) பட்டாசுகளும் தடை செய்யப்படுவதை முன் வைத்து இந்த மிருகவதை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் !!! அதென்ன, தீபாவளிக்கு மட்டும், குறிப்பிட்ட டெசிபல்களுக்குள் சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க அனுமதித்து, நிபந்தனைக்கு உட்பட்ட ஸ்பெஷல் status !!! (அந்த சட்டத்தை யாரும் மதிப்பதில்லை என்பது வேறு விஷயம்!) அது போலவே, ஜல்லிக்கட்டையும் சிலபல நிபந்தனைகளோடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது தான் நான் கூற வருவது.
அது போலவே, இந்த ஆர்வலர்கள், கோயிலில் கோழிகள்/ஆடுகள் (நேர்ந்து கொண்டதற்காக) பலியிடப்படுவதையும், பக்ரீத் பண்டிகையின் போது ஆடுகள்/ஒட்டகங்கள் வெட்டப்படுவதையும் எதிர்த்து விடாமல் போராடலாம். இது போல, அவர்கள் போராடுவதற்கு (ஜல்லிக்கட்டு தவிர்த்து!) எவ்வளவோ விஷயங்கள் இருக்கத் தான் செய்கின்றன !!!
எ.அ.பாலா
19 மறுமொழிகள்:
TEST !
///போல, அவர்கள் போராடுவதற்கு (ஜல்லிக்கட்டு தவிர்த்து!) எவ்வளவோ விஷயங்கள் இருக்கத் தான் செய்கின்றன !!!///
நீங்கள் சொன்ன குதிரை பந்தயம் ஒன்று. நன்றாக சொல்லி இருக்கீங்க!!!
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது சரியா?"
பதில் கீழே. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பிறகு என்ன எதிர்பார்ப்பு
//பண்டைய /தமிழர்/நாகரிகத்தில் "ஏறு தழுவுதல்" என்ற பெயரில் ஒருவர் அல்லது இருவர் காளையை அடக்குவது, இப்போது "ஜல்லிக்கட்டு"//
*** FLASH NEWS ***
Supreme court has allowed Jallikkattu to be conducted with certain conditions :)
பாலா பதிவு போட்டால் உச்சநீதிமன்றமே அதிருது இல்லே! :))
குசும்பன், தரன், மணியன்,
கருத்துக்கு மிக்க நன்றி.
திரைப்படங்களில் தாங்கள் குறிப்பிடும் காட்சிகள், இனி சாத்தியம் இல்லை!
மிருகம் படத்தில் சல்லிக்கட்டே அனுமதிகப்படவில்லை...
மேலும் குற்றவியல் வழக்கும் வரலாம்.
பிரபு,
கருத்துக்கு மிக்க நன்றி.
//பல கோழிகளின் கால்கள் ஒன்றாகக் கட்டப்பட்டு, தலைகீழாக அக்கோழிகள் சைக்கிள் கைப்பிடியில் தொங்க விடப்பட்டு, கசாப்புக் கடைக்கு எடுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சியை, பல சமயங்களில் நாம் பார்க்கிறோம். அது போலவே, மூச்சு விடக்கூட முடியாத வகையில், 10 மாடுகள் பயணிக்கக்கூடிய வண்டியில் 25 மாடுகள் ஏற்றப்பட்டு, பலமணி நேர (மரண வேதனை) தரும் கொடும்பயணத்தின் முடிவில், வெட்டப்படும் இடத்தை மாடுகள் அடைகின்றன!
//
இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்று கூறுங்களேன், நன்றி.
எ.அ.பாலா
என்னைப் போல அசைவ உணவுப் பிரியர்களை தர்மசங்கடப்படுத்தும் ஒரு விடயம்!
lion king படத்தில் விடைகள் கிடைக்கலாம்!
ஆயினும், தாங்கள் குறிப்பிடும் விடயம் சட்டப்படி குற்றமே!
மும்பையில் கோழிகள் குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆயினும் அங்கு கவனம் மாடுகள் மீதுதான். இவ்வாறு மாடுகளை கொண்டு செல்பவர்களைப் பிடிக்க தனி படையே உண்டு!
Al kabeer நிறுவனம் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் ஷோபா டே போன்றவர்கள் அங்கு எவ்வாறு மாடுகள் சுகாதாரமான முறையில் வெட்டப்படுகின்றன என்று எழுதினார்
எனினும், இந்தியா ஒரு ஏழை நாடு. ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு ரூ.200நாம் கொடுக்க தயாராக இருந்தால் இந்த குற்றத்தினை தடுக்க இயலும்.
பிரபு,
விளக்கத்திற்கு நன்றி.
//lion king படத்தில் விடைகள் கிடைக்கலாம்!
//
:))
தங்களை சங்கடப்படுத்துவதற்காக அதைக் கேட்கவில்லை! நீங்கள் சொல்வதிலுள்ள யதார்த்தம் புரிகிறது.
நல்ல செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இந்த மிருகவதை எதிர்ப்புக் காரங்களுக்கு வேற வேலை இல்லையா?? தினமும் வெட்டப்படும் ஆடு, மாடு மற்றும் கோழிகளைக் காப்பாற்றட்டும். வீதிகளில் திரியும் விலங்கினங்களை அவர்கள் வீட்டுக்கு முதலில் ஓட்டிச் சென்றுக் காப்பாற்றட்டும். ஜல்லிக்கட்டை முறைப்படுத்துதல் அவசியம். தடை செய்வது, முட்டாள்தனம்!
தஞ்சாவூரான்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க் நன்றி. கோர்ட் தடையை விலக்கியது நல்ல விஷயமே !
எ.அ.பாலா
சிறப்பான பதிவு ....
பாலா
தடையை விலக்கியாகி விட்டது.கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் ஒரு சிலர் செத்திருக்கின்றனர். இந்த குறைகளை வரும்காலத்தில் தவிர்க்க வேண்டும்.
மாடுகளுக்கு மிளகாய்பொடி,சாராயம் கொடுப்பதை தடுக்க வேண்டும்.
செல்வன்,
பாதுகாப்பு ஏற்பாடுகள் அலங்காநல்லூரில், ஓரளவுக்கு பாலமேட்டிலும் ம்ட்டுமே செய்யப்பட்டன. இங்கு உயிர்ச்சேதம் இல்லை!
அலங்காநல்லூரில் செய்யப்பட்டதை விட இதனை மேலும் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செய்ய வேண்டியது உள்ளது.
சாராயம், மிளகாய் பொடி என்றெல்லாம் ஏதும் இல்லை!
செல்வன்,
கருத்துக்கு நன்றி.
பிரபு,
மீள்வருகைக்கும், விளக்கத்திற்கும் நன்றி.
எ.அ.பாலா
நல்ல பதிவு, சரியான கருத்து, பாலா. மிருகவதை என்பது எந்தக் காரணத்திற்காகச் செய்தாலும் கண்டனத்திற்குரியதே.
கோழிகள் அன்றாடம் சாலைகளில் வதைக்கப் படுவது பற்றிய இந்த நெஞ்சை உருக்கும் திண்ணைப் பதிவைப் பாருங்கள் -
உயிரா வெறும் கறியா? - க்ருஷாங்கினி http://www.thinnai.com/?module=displaystory&story_id=20603314&format=html
மாமிசத்திற்காக விலங்குகளைக் கொல்லும்போதும் அவற்றிடம் மன்னிப்பு வேண்டி ஒரே வெட்டில் வெட்டிப் பின்னர் அவற்றை அழிக்க வேண்டும் என்று ஹிந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதனாலேயே குற்றுயிராக்கி சித்ரவதை செய்யும் இஸ்லாமிய "ஹலால்" அறுப்பில் வெட்டிய மாமிசத்தை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்துக்கள் உண்ண மாட்டார்கள்.
ஜடாயு,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் சுட்டிய திண்ணைக் கட்டுரையை
வாசித்தேன். அருமையான கருத்துகள் !
எ.அ.பாலா
Eating animals is not Crime..
But Playing with them is Crime...?!!?
Post a Comment